Sunday, September 26, 2010

’’ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’’-என்ன அர்த்தம்?

’’ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’’-என்ன அர்த்தம்?
ஆடி மாதம் மனிதர்களை நோய்கள் நெருங்கும் மாதம் என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன.அதற்க்கு பரிகாரமாய் ஆடிமாதம் செவ்வாய்கிழமை அன்று கடலில் நீராடி துர்க்கையை வழிபடுவது சிறப்பு.செவ்வாய் க்கு அதிபதி தெய்வமாக முருகன் இருப்பதால் கடல் இருக்கும் ஸ்தலம் திருச்செந்தூர் என்பதாலும், இந்த மாதம் செவ்வாய் கிழமை திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் ஓர் இரவு தங்கி வழிபட்டு வாருங்கள்.நோய் இருப்பவர்களும் படிப்படியாக நிவாரணம் பெறுவர்.சரியான மருத்துவம் கிடைக்கும்.

வேதராண்யம் கடலில் குளித்து அங்குள்ள ஈசனையும் துர்க்கையையும் வழிபட்டால் மிக சிறப்பு.இந்த மாத பஞ்சமி திதியில் வராகி தேவியை வழிபட்டாலும் மிக நல்லது.செய்வினை,கண் திருஷ்டி,வழக்கு,எதிரிகள் பிரச்சனை தீரும்.வராகிக்கு ஆலயம் என்றால் தஞ்சை பெரிய கோவிலிலும்,சென்னை தாம்பரத்திலிருந்துகாஞ்சிபுரம் செல்லும் பாதையில் உள்ள’கண்டி’ என்னும் ஊரில் துர்க்கை பீடத்திலும் உள்ளது.

No comments:

Post a Comment