Tuesday, September 21, 2010

sivan

சிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவன்
திராவிடர்களின் கடவுளெனவும், சைவர்களின் தலைவனாகவும் வழிபடக்கூடிய கடவுள் வடிவமே சிவன்.
சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வனும் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை வழிபட்டரோகள் உமா தேவி, உருத்திரன், திருமால், பிரமன், பிள்ளையார், முருகன், தேவர் முதல் இராவணன் வரை. எல்லோரும் அவன் அடிமை. சிவன் உருவாய் (நடராசன்), அருருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் நமக்கு காட்சி அளிக்கிறார். சிவன்னுக்கு பிறப்பு இறப்பு இல்லை. இருவினையும் இல்லை,
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றா னமருங்கோயில்- சம்பந்தர்

பொருளடக்கம்

[மறை]

[தொகு] சிவனின் ஜந்து முகங்கள்

[தொகு] சிவனின் தோற்றம்

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு அப்பகுதியிலேயே முதன்முதலில் நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.

[தொகு] திராவிக் கடவுள்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் சிவனை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலும் நம்மிடம் இருந்துள்ளது. சிவனை வழிபடும் இடங்களிலெல்லாம் திராவிடர்களின் பதிவுகள் இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரீகத்திலும் நம்முடைய மூதோர்கள் வாழ்ந்தற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று செந்தமிழ் செம்மொழி மாநாட்டில் கூறினார்.

[தொகு] சிவனது தனித்துவ அடையாளங்கள்

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றது.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றி தேவார பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
  • நெற்றிக்கண் காணப்படல்.
  • கழுத்து நிலநிறமாக காணப்படல்.
  • சடைமுடியில் பிறைநிலாவை கொண்டிருத்தல்.
  • நீண்ட சுருண்ட சடாமுடி
  • தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
  • உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
  • புலித்தோலினை ஆடையாக அணித்திருத்தல்.
  • கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
  • கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
  • நந்தியினை(எருது) வாகனமாக கொண்டிருத்தல்.

[தொகு] சிவனது உருவத்திருமேனி


முதன்மைக் கட்டுரை: சிவனின் திருமேனிகள்

[தொகு] நடராஜர்

வெண்கலதால் அமைந்த சோழர்கால நடராசர் சிலை
சிவனது உருவதிருமேனிகளில் நடராஜர் வடிவம் மிக பிரபல்யமானது.சிவனை ஆடலரசனாக கொள்ளும் வடிவாகும்.

[தொகு] தட்சணாமூர்த்தி

ஆலமரத்தின் கீழ் தெற்குதிசையினை பார்த்தவாறு முனிவர்களுக்கு யோகத்தினை விளக்க்கும் வகையில் அமர்ந்திருக்கும் வடிவ்மாகும்.

[தொகு] அர்த்த நாரிசுவரர்

சிவனின் ஆண் உருவம் பாதியும்,பார்வதியின் பெணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைந்த வடிவாகும்.

[தொகு] இலிங்கம்

சிவனது அரு உருவத்திருமேனிவடிவாகும்.

[தொகு] இலிங்கோற்பவர்

சிவனது உருவதிருமேனிகளில் ஒன்றாகும்.கருவறையின் பின் புறமாக மேற்கு நோகிகி அமைந்திருக்கும்.இறைவனது பாதமும் முடியும் கண்ணிற்கு புலப்படத வகையில் இவ் வடிவம் அமைந்திருக்கும்.

[தொகு] புகழ் பெற்ற சிவதலங்கள்

சைவசமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும்.சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு.

[தொகு] ஜோதி லிங்கங்கங்கள் உள்ள சிவதலங்கள்

இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணர்மலை (தமிழ்நாடு) அருணர்சலமே மூல சிவதலம்.
1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)
4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்)
5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்)
6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்)
7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்)
9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராஷ்டிரம்)
11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

[தொகு] பஞ்சபூத சிவதலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்று கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)
1.மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர்.
2.நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா
3.தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை
4.வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி
5.வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

[தொகு] ஐந்து தாண்டவங்களுக்கான சிவதலங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இதுதான்.
1.தில்லை(சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.
2.திருவாரூர்-அசபா தாண்டவம்.
3.மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.
4.அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.
5.திருமுருகன் பூண்டி-பிரம தாண்டவம்.

[தொகு] ஐந்து மன்றங்களுக்கான சிவதலங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள்(அடைப்புக் குறிக்குள் சபைகள்)
1.தில்லை(சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).
2.திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
3.மதுரை-வெள்ளி மன்றம் (இராஜ சபை).
4.திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
5.திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

[தொகு] சத்த விடங்க சிவதலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.
1.திருவாரூர்-வீதிவிடங்கர் (அசபா நடனம்).
2.திருநள்ளாறு- நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).
3.திருநாகைக் கோரணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).
4.திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).
5.திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).
6.திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்).
7.திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)

[தொகு] முக்தி தரவல்ல சிவதலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்
1.திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
2.சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
3.திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
4.காசி-இறக்க முக்தி தருவது

[தொகு] தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்)

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:
1.பாபநாசம்
2.சேரன் மகாதேவி
3.கோடகநல்லூர்
4.குன்னத்தூர்
5.முறப்பநாடு
6.திருவைகுண்டம்
7.தென் திருப்பேரை
8.ராஜபதி
9.சேர்ந்த பூ மங்கலம்

No comments:

Post a Comment